கணவனின் மனை புகுந்து எல்லா உறவுகளையும்
சங்கிலி யெனும்
அன்பால் இணைத்துக் கொடுப்பவள்
மருமகள் !
மாமியார் உறவினை தாயென
ஏற்றிடும் பந்தத்தில்
இன்னுமோர்
மகளவள் !
சீதனம் சுமந்தவள்
புக்ககம் வருகையில்
அகந்தையை
செருப்பென மாற்றிடும்
நல் குணமவள் !
பாரங்கள் யாவையும் பூ வென
மாற்றிடும்
பசுந்தளிரவள் !
கத்தியாய் மாறியே
இழிவுகள் யாதையும் வெட்டியே வீழ்த்திடும்
குலமகள் !
வழிந்திடும் கண்ணீரினில்
காயங்கள் போக்கிடும் வல்லமை உள்ளவள் இவள்
இனியவள் !
சுக துக்கங்களை
எங்களிடம் பகிர்ந்து
எங்கள் இறுதி மூச்சு வரை வாழும்
குலக்கொடியவள் !
இவ்வினியவள் நம்
இல்லத்திற்கு வந்த
வரமிவள் .
கவிதை: உஷா விஜயராகவன்
சங்கிலி யெனும்
அன்பால் இணைத்துக் கொடுப்பவள்
மருமகள் !
மாமியார் உறவினை தாயென
ஏற்றிடும் பந்தத்தில்
இன்னுமோர்
மகளவள் !
சீதனம் சுமந்தவள்
புக்ககம் வருகையில்
அகந்தையை
செருப்பென மாற்றிடும்
நல் குணமவள் !
பாரங்கள் யாவையும் பூ வென
மாற்றிடும்
பசுந்தளிரவள் !
கத்தியாய் மாறியே
இழிவுகள் யாதையும் வெட்டியே வீழ்த்திடும்
குலமகள் !
வழிந்திடும் கண்ணீரினில்
காயங்கள் போக்கிடும் வல்லமை உள்ளவள் இவள்
இனியவள் !
சுக துக்கங்களை
எங்களிடம் பகிர்ந்து
எங்கள் இறுதி மூச்சு வரை வாழும்
குலக்கொடியவள் !
இவ்வினியவள் நம்
இல்லத்திற்கு வந்த
வரமிவள் .
கவிதை: உஷா விஜயராகவன்
8 Comments
Awesome
ReplyDeleteநன்றி அம்மா...🥰
ReplyDeleteAwesome... 👌👌
ReplyDeleteWow...amazing
ReplyDeleteWishes to go forward and RCH grt heights 💕💕
ReplyDeleteThank you dear
DeleteNice one..Great MIL
ReplyDeleteAwesome!
ReplyDeleteWe write for you. So Please provide your feedback
Emoji