Vinayagar Chathurthi wishes, Vinayagar Chathurthi wishes in tamil, Ganesh Chathurthi wishes in tamil, Happy Vinayagar Chathurthi 2020,
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
ஆவணி மாதம் வளர்பிறை
சதுர்த்தி என்றாலே
விநாயகர் சதுர்த்தி என்போம்.
விநாயகர் விழா எடுப்போர்
அனைவருக்கும்
விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் !
கணபதியே
வரணும் வரணும்
எங்கள் இல்லங்களுக்கே
தரணும் தரணும்
வரங்களையே
மறவோம் மறவோம்
உன் மதிமுகமே !
விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்
உமையவளின் புதல்வனே
வேலனுக்கு முன்னவனே
நான்முகக் கடவுளே
யானைமுகத்தோனே
தருவாய் தருவாய்
கவசம் கவசம் !
இனிய பிள்ளையார் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்
யானை முகத்தோன் நீ
ஐந்து கரத்தோன் நீ
விக்னேஷ்வரரும் நீ
மோஷிகவாகனரும் நீ
இந்துக்களின் முழு
முதற்கடவுளும் நீ
கணபதியே நீ
எங்கள் துயர் துடைக்க
வருவாய் நீ !
விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்
உன் முன் உடைத்திட்ட
சதுர் தேங்காய்
சிதறல்கள்
என் கண் முன்னே
நீ உடைத்தெறிந்த
என் துன்பங்கள் !
இனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்
குப்பை மனதோடு
கும்பிட வந்து
உனை தொந்தரவு
செய்தாலும்
தொப்பை நாயகனே
உன் அருளைத்
தந்திடுவாய் !
விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்
அருகம்புல் பிரியனே
உனை நினைத்தே
வாழ்கிறோம்
எங்களது வினை தீர்த்து
அருள் புரிவாய்
கணபதியே !
விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்
வலம்புரி விநாயகனே
வேண்டிய வரங்களை
தருபவனே
நித்தம் உனை நான்
தொழுவேனே
காப்பாய் காப்பாய்
எனை நீயே !
விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்
சிவனின் புதல்வனே
முருகனின் உடன்பிறப்பே
முப்பத்து முக்கோடி
தேவர்களின் முதல்வனே
விநாயகனே போற்றி போற்றி !
விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்
ஏடெடுத்தால் ஏட்டில்
முதல் நிற்பவனும் நீ
பிள்ளையார் சுழி
போட வைப்பவனும் நீ
அறிவுக்கு நீ
கணபதி நீ போற்றியே !
விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்
உனது தும்பிக்கை
எங்களது வாழ்வின்
நம்பிக்கை
விநாயகனே போற்றி !
விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்
கவிதை: உஷா விஜயராகவன்
0 Comments
We write for you. So Please provide your feedback
Emoji